"உடலுக்கெல்லாம் ஆரோக்கியம்"

இன்றைய நீதிமொழி:
"உடலுக்கெல்லாம் ஆரோக்கியம்"
*அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம் (நீதிமொழிகள் 4:22)*
கர்த்தருடைய வார்த்தைகளுக்கு விசேஷித்த குணங்கள் உண்டு. அவை வெறும் வார்த்தைகள் அல்ல, அவைகளுக்கு ஜீவன் உண்டு. வல்லமை உண்டு. அற்புதத்தை செய்யும் வல்லமை உண்டு. தமது வசனத்தை அனுப்பி கர்த்தர் குணமாக்க வல்லவர். தமது எல்லா பிரஸ்தாபத்தை பார்க்கிலும் அவர் தமது வார்த்தையை மகிமைப்படுத்தி இருக்கிறார்.
அந்த அற்புத வார்த்தைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு அவை நித்திய ஜீவனை அருளுகின்றன. மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று வேதம் கூறுகிறது. நமக்கு ஜீவனையும், நித்திய ஜீவனையும் இந்த அதிசய வார்த்தைகளை கொடுக்கின்றது.
மட்டுமல்ல, அவை உடலுக்கெல்லாம் ஆரோக்கியத்தை கொடுக்க வல்லதாயிருக்கிறது. இங்கு வியாதியிலிருந்து விடுதலை என்று இல்லாமல் ஆரோக்கியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது வியாதியில்லாத வாழ்வு, ஆரோக்கியமான வாழ்வு என்று பொருளாகும். ஆனாலும் சங்கீதம் 23 ஐ திரும்ப திரும்ப சொல்லி, விசுவாச வார்த்தைகளை அறிக்கையிட்டு, தங்களது கொடிய வியாதியிலிருந்து விடுதலை பெற்று கொண்டவர்களும் உண்டு. ஒவ்வொரு வாக்குதத்தங்களும் ஆம் என்றும் ஆமென் என்றும் நம் வாழ்வில் நிறைவேற கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார்.
அப்படிப்பட்ட ஜீவனுள்ள வார்த்தைகளை தினமும் வாசித்து, அதை உட்கொண்டு, நமக்கு ஜீவனையும், ஆரோக்கியத்தையும், நித்திய ஜீவனையும் பெற்று கொள்வோமாக! ஆமென்!! அல்லேலூயா!!!
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கென்று நீர் கொடுத்திருக்கிற அற்புத வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவைளை கண்டுபிடிப்பவர்களுக்கு நீர் கொடுக்கும் ஜீவனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் துதிகளை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே!! ஆமென்.!!!.

Comments

Popular posts from this blog

மாராவின் கசப்பு மதுரமானது

நீ...சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்