ஊக்கமான ஜெபம்

ஊக்கமான ஜெபம்- அப்போஸ்தலர் 12:5,7
அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
[7]அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
பேதுரு இயேசுவைக்குறித்து பிரசங்கித்ததால், ஏரோதுராஜா அவரை சிறையில் அடைத்து, பலத்த காவல் வைக்கிறான். ஆனால் சபையார் அவருக்காக ஊக்கமாய் ஜெபித்ததால். கர்த்தருடைய தூதன் வந்து, பேதுருவைவிடுவிக்கிறார். அவரை கட்டியிருந்த சங்கிலிகள் கலண்டுவிழுந்துவிடுகிறது .
சபையாரின் ஊக்கமானஜெபத்தினிமித்தம் அந்த அற்புதம் நடக்கிறது .நாமும் சபையாக சேர்ந்து, அல்லதுகுடும்பத்தாரோடு, நண்பர்களோடு, என்று மற்றவர்களோடு ஒருமனப்பட்டு ஊக்கமாக ஜெபிக்கும்போது .அற்புதம் நடக்கும். ஏரோது மீண்டும் தேவபிள்ளைகளுக்கு விரோதமாய் செயல்பட்டு, தேவனை மகிமைப்படுத்தாததினால். தேவதூதன் அவனை அடித்தான். அவன் புளு புளுத்து இறந்தான் . இன்றும் ஒருமனப்பட்டு ஊக்கமாக ஜெபிக்கும்போது .பலத்த அற்புதங்கள் நடைபெரும். ஒருவழியாய் வரும் எதிரிகள் ஏழு வழியாய் முறியடிக்கப்பட்டு சிதறி ஓடுவார்கள். ஊக்கமான ஜெபம் வல்லமை உள்ளது

Comments

Popular posts from this blog

மாராவின் கசப்பு மதுரமானது

நீ...சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்