|The WORD| : ஜீவபுஸ்தகத்தில்..
|The WORD| : ஜீவபுஸ்தகத்தில்..
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். (வெளி 21:27)
நம் கைகளில் இருக்கும் வேதத்தில்
1. தாவீது என்ற பெயர் 1118 தடவைகள்
2. மோசே என்ற பெயர் 740 தடவைகள்
3. ஆரோன் என்ற பெயர் 339 தடவைகள்
4. சவுல் என்ற பெயர் 338 தடவைகள்
5. ஆபிரகாம் என்ற பெயர் 306 தடவைகள்
6. சாலொமோன் என்ற பெயர் 295 தடவைகள்
7. யாக்கோபு என்ற பெயர் 270 தடவைகள்
8. யோசேப்பு என்ற பெயர் 208 தடவைகள்
9. யோசுவா என்ற பெயர் 197 தடவைகள்
10. பவுல் என்ற பெயர் 185 தடவைகள்
11. பேதுரு என்ற பெயர் 166 தடவைகள்
12. யோபு என்ற பெயர் 137 தடவைகள்
13. எரேமியா என்ற பெயர் 136 தடவைகள்
14. சாமுவேல் என்ற பெயர் 135 தடவைகள்
15. ஈசாக்கு என்ற பெயர் 127 தடவைகள்இடம் பெற்றுள்ளன..
ஆனால் பாருங்கள் இத்தனை பேருடைய பெயர்களும், கர்த்தரின் கரத்தில் இருக்கும் ஜீவபுஸ்தகத்தில் இல்லையென்றால், ஏதாகிலும் அவர்களுக்கு பிரயோஜனம் உண்டா? இல்லையே! இருக்கும் என்று விசுவாசிப்போம்.
நம் கதைக்கு வருவோம்! எத்தனை இடங்களில் நம் பெயர் வரவேண்டும் என விரும்புகிறோம்? அன்பளிப்புப் பொருட்களில்; நன்கொடை அறிவிப்பில்; ஆலயக் கல்வெட்டில்; நன்றி அறிவிப்பில்; வாக்குரிமை அட்டவணையில் என எத்தனை எத்தனை? ஜீவபுஸ்தகத்தில் நம் பெயர் வரவேண்டுமே என்ற விருப்பம் உண்டா நம் உள்ளத்தில்? எத்தனை சொத்து பத்துக்களில், பத்திரங்களில், பாத்திரங்களில் நம் பெயர் பொறிக்கப்பட்டிருந்தாலும், ஜீவபுஸ்தகத்தில் இருக்கும் பெயருக்கு ஈடாகாதே! பரலோகம் நுழைய வேண்டுமே!
பாவபுஸ்தகமாய் நம் வாழ்வு இருந்தால், ஜீவபுஸ்தகத்தில் பெயர் இருக்குமோ? பாவநாசர் இயேசு மரித்தது நமக்காக! பரிந்துபேசுவதும் நமக்காக! இன்றே மாற்றம் வரட்டும் இதயத்தில்! இன்றே ஏற்றப்படும் நம் பெயர் ஜீவபுஸ்தகத்தில்!! ஆமென்!!!

Comments
Post a Comment