சாகாமல் பிழைத்தேன்!

|The WORD| : சாகாமல் பிழைத்தேன்!
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.. (கலாத்தியர் 2:20)
அக்காலத்தில் வீதிவழியே ஒரு மனுஷன் சிலுவையை சுமந்துகொண்டு செல்கிறான் என்றால், வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் முடிவே செய்துவிடுவார்கள் அம்மனிதன் சாகப்போகிறான் என்று!
சிலுவை மரமும் அனேகரின் உயிரை பலியாக்கியது! சிலரை ஆணியடித்து வைப்பார்கள். சிலரை கூர்மையான குச்சியால் வயிற்றில் குத்தி கழுத்துப்பகுதியில் வெளியே வரவைத்து, தொங்கவிடுவார்கள். சிலரை சிலுவையில் கயிற்றால் கட்டி தொங்கவைப்பார்கள். அவர்கள் பசி, பட்டினி வேதனையாலும், மாம்சம் தின்னும் பறவைகளால், இரத்தம் சிந்தச்சிந்த சதை கொத்தி பிய்க்கப்படுவதாலும் மரிப்பார்கள். எப்படியோ சிலுவையை தோளில் ஏந்திவிட்டால், மரணம்தான்!
ஆனால் பவுல் சொல்கிறார்.. கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்.. அப்போது மரித்திருக்கவேண்டுமே? ஆனால் பிழைத்திருக்கிறேன் என்று சொல்கிறாரே! தனியாக சுமந்தால் மரணம்தான்.. கிறிஸ்துவோடு சுமந்தால் ஜீவன்தான்! கிறிஸ்து இயேசு நமக்காக மரித்து நம்மைப் பிழைக்கவைத்தார்! உலக சிலுவையின் முடிவு மரணம்.. ஆவிக்குரிய சிலுவையின் முடிவு ஜீவன் மட்டுமே! ஏனென்றால் வாழ்வது நாமல்ல.. நம்மில் இயேசு வாழ்கின்றார்.!!. ஆமென்!!!

Comments

Popular posts from this blog

மாராவின் கசப்பு மதுரமானது

நீ...சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்