*திருமணமும், அன்பின் ஐக்கியமும்*

*தெளிதேன் துளிகள்*

_வாசிக்க: கொலோசெபர் 3: 14-19_
*திருமணமும், அன்பின் ஐக்கியமும்*
_இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோசெபர் 3:14)_
அலபாமா என்ற இடத்தில் உள்ள ஒரு திருச்சபையைச் சார்ந்த ஒரு தம்பதியர், தங்கள் ஊரில் நடத்தப்பட்ட மகிழ்ச்சியான மணவாழ்க்கை என்ற போட்டியில் வெற்றி பெற்றனர். பத்தாயிரம் பேர் போட்டியிட்டபோதிலும், அவர்கள் முதலிடம் பிடித்தனர். அவர்களது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் இரகசியத்தைக் கேட்டபோது அவர்கள்: எங்களுடைய இருபத்தியேழு ஆண்டு கால திருமண வாழ்க்கையில், ஒருவரை ஒருவர் நேசிப்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. ஏனெனில், நாங்கள் எப்போதும் கொடுக்கிறவர்களாக, அதாவது: விருந்துண்ண ஆசைப்பட்டாலும், விருந்து கொடுக்க, பேச நினைத்தாலும், பேசுவதைக் கேட்க, ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் கீழ்ப்படுத்திக்கொள்ள ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுத்திருக்கிறோம். மறக்கமுடியாதவை என கருதும் மற்றவரது தவறுகளை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம். பிரிந்து வாழ்வதே மேல் என்று நினைக்கும் நிலை வந்தாலும் சேர்ந்திருக்க முடிவெடுக்கிறோம் என்று கூறினார்கள்.
இதைப் போன்ற கேள்விகள் இக்காலத்து தம்பதிகளிடம் கேட்கப்பட்டால் அநேகர் முதல் சுற்றிலேயே தோற்றுவிடுவார்கள் என்பது நிச்சயம். பல வருட தாம்பத்யம் தம்பதியினரை அன்பின் ஐக்கியத்திற்குள் இன்னும் அதிகமாக கொண்டு வர வேண்டும். ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, பேரப்பிள்ளைகள் எடுத்த வயதிலும் தம்பதியினர் விவாகரத்து பெற விழைகின்றனர். விவாகரத்து வரை போகாவிட்டாலும், குறைந்த பட்சம் தனித்தனியே வசிக்கின்றனர். இது தவறு! தேவன் ஆணையும் பெண்ணையும் படைத்து, அவர்கள் ஒருவரோடொருவர் இசைந்து, சமாதானத்துடன் வாழ்வதற்காக குடும்ப வாழ்வை திட்டம் பண்ணியிருக்கிறார். இத்திட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் அவரை துக்கப்படுத்துகிறோம். நாம் இணைந்து வாழ்வதையே அவர் விரும்புகிறார். ஆனால் நாமோ பிரிந்து செல்வதையே விரும்புகிறோம். இது வருத்தத்திற்குரிய விஷயம்!
அன்பு நண்பர்களே, ஆண்டவர் நம்மை அவரது அன்பினால் நிரப்புவாராக. அப்பொழுதுதான் நமது வாழ்க்கைத் துணையை நாம் முழுமனதோடு நேசிக்க முடியும். ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் மேன்மை, கொடுத்துவிட்டு பெற்றுக்கொள்வதில் அல்ல, பெற்றுக் கொள்ளாமலே கொடுப்பதில்தான் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை துணைக்கு நம்முடைய எல்லாவற்றையும் கொடுக்க நாம் முடிவு செய்வோம். செயல்படுவோம். பூரணஅன்பாகிய கட்டினால் நம்முடைய வாழ்க்கை கட்டப்படவேண்டும். நம்மை அதற்கு ஒப்புக் கொடுப்போம். கர்த்தரை நமது மணவாழ்க்கையினால் மகிமைப்படுத்துவோம்.
*ஜெபம்*: அன்பின் ஆண்டவரே, நீர் எங்களை குடும்பமாக இணைத்ததற்காய் நன்றி. நாங்கள் அன்பிலே இணைந்து வளரவும், நீர் விரும்பும் வண்ணமாக வாழவும் எங்களுக்கு உதவி புரியும். எங்களுக்குள் உம்முடைய சமாதானமும், அன்பும், ஒரு இசைவான சங்கமத்தை உண்டாக்கட்டும்.!. ஆமென்.!!!.

Comments

Popular posts from this blog

மாராவின் கசப்பு மதுரமானது

நீ...சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்