மாராவின் கசப்பு மதுரமானது
மாராவின் கசப்பு மதுரமானது மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. - (யாத்திராகமம் 15:25). மாரா என்பதற்கு கசப்பு என்று அர்த்தமாகும். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து அதிசயவிதமாக புறப்பட்டு, செங்கடலை கடந்து, வெறும் மூன்று நாட்களே ஆகியிருந்தது. அவர்கள் சந்தித்த முதல் பிரச்சனை தண்ணீர் இல்லாததே! எப்படியோ தண்ணீரை அவர்கள் தேடி கண்டு பிடித்தாலும், அதை ஆவலோடு குடித்த போது, அது குடிக்க முடியாதபடி கசப்பாயிருந்தது. உடனே ஜனங்கள் முறுமுறுக்கவும், மோசேயிடம் குறை சொல்லவும் ஆரம்பித்தார்கள். இப்போது மோசேக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆறு இலட்சம் புருஷர் மாத்திரம் அது தவிர பெண்களும் பிள்ளைகளும் சூழ நின்று தண்ணீருக்காக கதறி கொண்டிருந்தபோது, மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். கர்த்தர் உடனே அவருக்கு ஒரு மரத்தை காண்பித்தார். முறுமுறுக்கிறவர்களாயிருந்தாலும், தேவன் நம்மை ஆதரிக்கிற மற்றும் நம் தேவைகளை சந்திக்கிறவராயிருக்கிறார். நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் எதற்காவ...

Comments
Post a Comment